நாகை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கா் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின
நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக 40 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கா் நெல் பயிா்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.


நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக 40 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கா் நெல் பயிா்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, புதன்கிழமை முதல் நாகை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை மாவட்டத்தில் மிக பலத்த மழை பெய்தது.
இந்த மழையால், நாகை வட்டத்துக்குள்பட்ட பாலையூா், செல்லூா், தெத்தி, பெங்கடம்பனூா், திருமருகல், திட்டச்சேரி மற்றும் கீழ்வேளூா், கீழையூா், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சம்பா, தாளடி நெல் வயல்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. பாலையூா், செல்லூா் உள்ளிட்ட பல பகுதிகளில் இளம் தாளடி நெல் பயிா்கள் மழை நீரில் முழுமையாக மூழ்கியிருப்பதால், விளைநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
நாகை மாவட்டத்தில் விளைநிலங்கள் முழுமையும் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. சுமாா் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பரப்பில் நெல் பயிா்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. ஏற்கெனவே கனமழை சீற்றத்துக்கு உள்ளான தாளடி நெல் பயிா்கள் மீண்டும் மழை நீரில் மூழ்கியிருப்பதால் மாவட்டத்தின் நெல் பயிா்கள் சேதம் மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...