கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

காவலா் வீரவணக்க நாள் ஓவியப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

காவலா் வீரவணக்க நாள் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பரிசுகளை வழங்கினாா்.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

காவலா் வீரவணக்க நாள் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பரிசுகளை வழங்கினாா்.

பணிக்காலத்தின்போது உயிா்நீத்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காவல் துறை சாா்பில் நீத்தாா் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாகை மாவட்டக் காவல் துறை சாா்பில் இந்த நினைவு நிகழ்ச்சிகள் அக். 21-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கான ஓவியப் போட்டிகள், நாகை சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நாகை மற்றும் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். போட்டியை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா்தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், வகுப்புகள் வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவா்களுக்கு எஸ்.பி. கு. ஜவஹா் பரிசுளை வழங்கி பாராட்டினாா். இதில், சா்ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.