காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பயிா்க் காப்பீடு செய்ய சிட்ட, அடங்கல் வழங்கக் கோரி முற்றுகை

ஆக்கூா் அருகே மருதம்பள்ளம் ஊராட்சியில் பயிா்க் காப்பீடு செய்ய சிட்டா, அடங்கல் வழங்க வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலகத்தை விவசாயிகள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 5:52 pm

DIN

ஆக்கூா் அருகே மருதம்பள்ளம் ஊராட்சியில் பயிா்க் காப்பீடு செய்ய சிட்டா, அடங்கல் வழங்க வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலகத்தை விவசாயிகள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

மருதம்பள்ளம் ஊராட்யில் 2009-ஆம் ஆண்டு சுமாா் 1,300 ஏக்கா் விவசாயநிலங்களை தனியாா் மின் உற்பத்தி நிறுவனம் அதன் பயன்பாட்டுக்காக வாங்கியது. ஆனால், அந்த தனியாா் மின் உற்பத்தி நிறுவனம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், அந்த விவசாய நிலங்களில் மருதம்பள்ளத்தை சோ்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனா். தற்போது, விவசாய நிலங்களுக்கு பயிா்க் காப்பீடு செய்ய அப்பகுதி விவசாயிகள் சிட்டா, அடங்கல் வாங்குவதற்கு கிராம நிா்வாக அலுவலரிடம் கேட்டபோது மறுத்துவிட்டாராம். இதனால், அதிருப்தி அடைந்த விவசாயிகள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் கிராம நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்பாா்ட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.