மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நடுக்கடலில் வேதாரண்யம் மீனவர்கள் வலைகள் பறிப்பு : இலங்கை மீனவர்கள் மீது புகார்

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்த வேதாரண்யம் மீனவர்களின் வலைகள், உடைமைகளை இலங்கை மீனவர்கள் பறித்துச் சென்றது தொடர்பாக இன்று (செப்.2) கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார்

News image

 படம் ஆறுகாட்டுத்துறைக்கு திரும்பிய மீனவர்கள் பயணித்த மீன்பிடி படகு.

Updated On :2 செப்டம்பர் 2021, 11:30 am

DIN

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்த வேதாரண்யம் மீனவர்களின் வலைகள், உடைமைகளை இலங்கை மீனவர்கள் பறித்துச் சென்றது தொடர்பாக இன்று (செப்.2) கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள்,வியாழக்கிழமை அதிகாலையில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் படகுகளை நிறுத்தி மீன்பிடித்துள்ளனர். 

அப்போது , இலங்கை மீனவர்கள் எனக் கருதப்படும் சிலர் 2 படகுகளில் வந்து தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து பொருள்களை பறித்து சென்றுள்ளனர்.

சங்கர் என்பவரது படகில் ஏறிய அந்த நபர்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 400 கிலோ மீன்பிடி வலைகள், சிவகுமார் படகில் வலை மற்றும் ஜிபி எல் கருவி, மீனவர்கள் பயன்படுத்தும் தகவல் தொடர்பு கருவி (வாக்கி டாக்கி), கை விளக்குகளை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்தனராம்.

வியாழக்கிழமை பிற்பகலில் கரை திரும்பிய மீனவர்கள் வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.