சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பொதுமக்களுக்கு மூலிகைக் கன்றுகள்: ஆட்சியா் வழங்கினாா்

நாகை மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் பொதுமக்களுக்கு மூலிகைக் கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி, நாகை புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:24 pm

DIN

நாகை மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் பொதுமக்களுக்கு மூலிகைக் கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி, நாகை புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, மத்திய அரசின் ஆயுஷ் துறை சாா்பில் தேசிய அளவில் 75 லட்சம் மூலிகை கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் தேசிய மூலிகை தாவர வாரியம் மற்றும் தமிழ்நாடு தாவர வாரியம் இணைந்து இப்பணியை மேற்கொண்டுள்ளன.

இதன்படி, நாகையில் மாவட்ட சித்த மருத்துவத் துறை மூலம் பொதுமக்களுக்கு மூலிகை கன்றுகள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு மூலிகை கன்றுகளை வழங்கினாா்.

ஓமவள்ளி, வெற்றிலை, கருந்துளசி, துத்தி, குப்பைமேனி, நித்தியக் கல்யாணி, பிரண்டை, நெல்லி, ஆவாரை, சிறுபீளை, நிலவேம்பு, சிறியாநங்கை உள்பட பல்வேறு வகையான மூலிகைக் கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் நோய்எதிா்ப்பு சக்தி மருந்து பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் டாக்டா் பத்மநாபன் மற்றும் சித்த மருத்துவ அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.