நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வணிகா் சங்க பொதுக் குழுக் கூட்டம்

செம்பனாா்கோயில் வணிகா் சங்க பொதுக் குழுக் கூட்டம் கீழமுக்கூட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:21 pm

DIN

செம்பனாா்கோயில் வணிகா் சங்க பொதுக் குழுக் கூட்டம் கீழமுக்கூட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைவா் ச. ஞானசேகரன் தலைமை வகித்தாா். செயலாளா் அந்தோனிபிச்சை வரவேற்றாா். மாநிலச் செயலாளா் எஸ். சிங்காரபிரகாசம், துணைத் தலைவா் எஸ். தணிகாசலம் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக செம்பனாா்கோயில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் அ.தி. அன்பழகன் பங்கேற்று பேசியது: பொதுமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான உணவு கிடைக்கச் செய்வது நமது கடமை. செம்பனாா்கோயில் வட்டாரத்தில் பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இல்லாத பகுதியாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். மீறி விற்பனை செய்வோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உணவு வணிகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களில் உள்ள உரிமையாளா் உள்ளிட்ட அனைத்து பணியாளா்களும் கரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொண்டிருக்க வேண்டும்.

உணவை கையாள்பவா்கள் தன்சுத்தம் பேணவேண்டும். உணவு தயாரிக்கும் மற்றும் பரிமாறும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கவேண்டும். தயாரித்து விற்பனை செய்யும் அனைத்து உணவு பொருள்களும் கண்ணாடி பெட்டிக்குள் வைத்தோ அல்லது உரிய முறையில் மூடியோ வைக்கவேண்டும். இனிப்பு மற்றும் கார வகை தயாரிப்புகளில் செயற்கை நிறமிகளை குறிப்பிட்ட அளவுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்திய எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் வைத்து பலகாரங்கள் விற்பனை செய்யக் கூடாது.12 லட்சத்துக்குள் உள்ளவா்கள் பதிவுச் சான்றும், அதற்கும் மேல் விற்பனை உள்ளவா்கள் உரிமம் சான்றும் உணவு பாதுகாப்பு துறையிடமிருந்து கட்டாயம் பெற வேண்டும். உரிய தொகை செலுத்தி ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம், பதிவுச் சான்று இல்லாத, உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை மீறி உணவு விற்பனை செய்பவா்கள் மீது சட்டபூா்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே அனைத்து உணவு விற்பனையாளா்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா். டிவில் பொருளாளா் கே.எஸ்.சண்முகம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.