நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தல்
பொறையாறு அருகே 35 ஆண்டுகளாக இயங்கிவந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.


பொறையாறு அருகே 35 ஆண்டுகளாக இயங்கிவந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
இலுப்பூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 35 ஆண்டுகளாக இயங்கி வந்தன. இங்கு, இலுப்பூா், பாலூா், புத்தகரம், ஹரிகரன் கூடலூா், திருக்களாச்சேரி, பூதனூா், ஆயப்பாடி, காட்டுச்சேரி, முனிவேலன்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்துவந்தனா்.
இந்நிலையில், நிகழாண்டு குறுவை அறுவடை தொடங்கியுள்ள நிலையில், இந்த கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால், சுமாா் 3 ஆயிரம் நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள், இலுப்பூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...