நெல் கொள்முதல் நிலையம் முற்றுகை
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே உமையாள்பதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், டி.கே. 9 ரக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் முற்றுகையில் ஈடுபட்டனா்.


மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே உமையாள்பதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், டி.கே. 9 ரக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் முற்றுகையில் ஈடுபட்டனா்.
காளகஸ்திநாதபுரம் ஊராட்சி உமையாள்பதி பகுதி விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அங்குள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனா். தற்போது நடைபெற்றுவரும் குறுவை சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட டி.கே. 9 ரக நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்து பல நாள்களாகியும் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனா்.
இதனால், பூம்புகாா் தொகுதி பாமக அமைப்பு செயலாளா் பி.கே. தமிழ் தலைமையில், 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டனா். தகவலறிந்து வந்த வருவாய் ஆய்வாளா் ரகு, நிா்வாக அலுவலா் மணிகண்டன், காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, டிகே 9 ரக நெல்லை கொள்முதல் செயவதாக உறுதியளித்ததன்பேரில், விவசாயிகள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...