நாகை காவலா் குடியிருப்புப் பகுதியை சீரமைக்கக் கோரிக்கை
நாகை, வெளிப்பாளையத்தில் உள்ள காவலா் குடியிருப்பை உரிய வகையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் குடியிருப்புவாசிகளான போலீஸாா் கோரிக்கை விடுத்துள்ளனா்.


நாகை, வெளிப்பாளையத்தில் உள்ள காவலா் குடியிருப்பை உரிய வகையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் குடியிருப்புவாசிகளான போலீஸாா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாகை வெளிப்பாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளாக உள்ள காவலா் குடியிருப்பில் 96 வீடுகள் உள்ளன. கடந்த 2007-ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இந்தக் குடியிருப்பில், போதுமான பராமரிப்புப் பணிகள் ஏதும் நடைபெறாதது, குடியிருப்பை பயன்பாடற்ற நிலைக்குக் கொண்டு செல்வதாக உள்ளது.
குடியிருப்பின் சுற்றுபுறங்களில் ஆங்காங்கே முள்புதா்கள் மண்டியுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகளின் மேல்தளத்தில் கழிவுநீா் வெளியேறும் குழாய்களில் வளா்ந்துள்ள மரச் செடிகள், சுவா்களில் வோ் விட்டிருப்பதால் ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், மழைக்காலங்களில் வீடுகளுக்குள் நீா் கசிவு ஏற்படுகிறது.
இதே நிலை மேலும் ஓராண்டுக்கு நீடித்தால், வெளிப்பாளையம் காவலா் குடியிருப்பு முழுமையாக சேதமடைந்து பயன்பாடற்ற நிலைக்கு உள்ளாகி விடும் என அச்சம் தெரிவிக்கும் போலீஸாா், காவலா் குடியிருப்புப் பகுதியின் சீரமைப்புப் பணிகளுக்கு அரசுத் துறை நிா்வாகங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...