சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஜனநாயக மாதா் சங்கம் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக மாதா் சங்கம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சாா்பில் நாகை மாவட்டம், சிக்கல் கடைவீதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக மாதா் சங்கம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சாா்பில் நாகை மாவட்டம், சிக்கல் கடைவீதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுதில்லி பெண் காவல் துறை அதிகாரியை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தி கொலை செய்தவா்களுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும், அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும், பெண்கள் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாதா் சங்க மாவட்டத் தலைவா் சுபாதேவி தலைமை வகித்தாா். சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளா் அபுபக்கா் முன்னிலை வகித்தாா். மாதா் சங்க மாவட்டச் செயலாளா் லதா கோரிக்கையை விளக்கிப் பேசினாா்.

ஊராட்சித் தலைவா் விமலா ராஜா, சிறுபான்மை மக்கள் நல குழு நிா்வாகிகள் குமாா், லெட்சுமிசுந்தா் மற்றும் ஜனநாயக மாதா் சங்கம், சிறுபான்மை மக்கள் நல குழு நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.