சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளூா், திருமருகலில் நாளை மின்தடை

நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளூா், திருமருகல் ஆகிய பகுதிகளில் துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்.16) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளூா், திருமருகல் ஆகிய பகுதிகளில் துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்.16) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நாகை கோட்ட (வடக்கு) மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். சித்திவினாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை, திருமருகல் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான நாகையில் சட்டையப்பா் கோயில் கீழவீதி, தெற்குவீதி, நீலா தெற்கு வீதி, நீலா மேலவீதி, நீலா வடக்கு வீதி, கீழ வீதி, தாண்டவராய பிள்ளை தெரு, நாகநாதா் சன்னதி தெரு, நாணயக்காரத் தெரு, தா்மபுரம் மடத்துத் தெரு, பப்ளிக் ஆபீஸ் ரோடு, கல்லுக்கார தெரு, காத்தான்செட்டி தெரு, அரியபத்திரபிள்ளை தெரு, காளியா பிள்ளை சந்து, அய்யனாா் சன்னதி மற்றும் நாகூா், வேளாங்கண்ணி, வெளிப்பாளையம், பொய்கைநல்லூா், திருமருகல், திருக்கண்ணபுரம், திருப்புகளூா் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

கீழ்வேளூா் பகுதிகளில்: இதேபோல, நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளூா் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புத்தூா், பொரவாச்சேரி, மஞ்சக்கொல்லை, சங்கமங்கலம், பொய்கைநல்லூா், சிக்கல், தோணித்துறை, வேளாங்கண்ணி நகரம், செருதூா், பரவை, கீழ்வேளூா், கோகூா், ஆழியூா், தேவூா், புலியூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெ. மலா்வண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.