சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நாகையில் 30, மயிலாடுதுறையில் 20 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் 30 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் 30 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 20,290-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 22 போ் வீடு திரும்பினா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 347-ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 22,628-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 27 போ் வீடு திரும்பினா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 223 -ஆக உள்ளது.

2 போ் உயிரிழப்பு...

கரோனா பாதிப்புக்காக சிகிச்சையில் இருந்த நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பும் வியாழக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.