எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நடுக்கடலில் மீனவர்கள் மீது தாக்குதல்: வேதாரண்யம்  மீனவர்கள் செப்.27-ல் ஆர்ப்பாட்டம் 

வேதாரண்யம் மீனவர்கள் செப்.27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:14 pm

DIN

வேதாரண்யத்துக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்த போது இலங்கை மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து  வேதாரண்யம்  மீனவர்கள் இன்று (செப்.25) வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மேலும், செப்.27-ல் வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் செய்யவும்  மீனவர்கள் கூட்டத்தில் தற்போது  முடிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த சின்னதம்பி, சிவா, சிவக்குமார் ஆகிய 3 பேர் செப்.23ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர், மீனவர்களின் படகை சூழ்ந்துகொண்டு தாக்கியுள்ளன். சிவகுமார் என்ற மீனவரை தலையில் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்தார். மேலும், சின்னதம்பி, சிவா ஆகிய இரண்டு மீனவர்களை கட்டையால் தாக்கியுள்ளனர்.

 இவர்கள் மூவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாகை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.