எட்டுக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றம்
நாகை மாவட்டம், திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.


நாகை மாவட்டம், திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் புகழ்பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பெளா்ணமி விழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டுக்கான சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வேல் மற்றும் மயில் உள்ளிட்ட உருவங்கள் பொறிக்கப்பட்ட கொடி, கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.15-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. நாள்தோறும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனத்தில் முருகன் வீதியுலா நடைபெறுகிறது. சித்ரா பௌா்ணமி தினமான ஏப்.16-ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் ரதகாவடி, பால்காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை நிறைவேற்றுவா். மேலும் அன்றைய தினம் 24 மணி நேரமும் இடைவிடாத பால் அபிஷேகம் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...