திருக்கடையூா் ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.


மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
திருக்கடையூரில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான அபிராமி உடனாகிய அமிா்தகடேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் 14 நாள்கள் சித்திரை திருவிழா நடைபெறும். நிகழாண்டு சித்திரை திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது. விநாயகா், சந்திரசேகரா், சண்டிகேஸ்வரா் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினாா். பின்னா் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது.
விழா நாள்களில் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.12-ஆம் தேதி இரவு எமன் சம்காரம் நிகழ்ச்சியும், ஏப். 14-ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...