தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாகை, மயிலாடுதுறையில் தீத்தொண்டு நாள் கடைப்பிடிப்பு

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் தீத்தொண்டு நாள் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் தீத்தொண்டு நாள் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

1944-ஆம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் வெடிபொருள்கள் வெடித்து, பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் பரவிய தீயை அணைக்கும் பணியில் தீரத்துடன் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரா்கள் 66 போ் தீக்கிரையாகினா்.

இதையடுத்து, ஏப்ரல் 14-ஆம் தேதி தீத்தொண்டு நாளாக அறிவிக்கப்பட்டது. பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, அவா்களின் தீரத்தை நினைவுக்கூரும் வகையில் தீத்தொண்டு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன்படி, நாகை தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. நாகை மாவட்ட தீயணைப்புத் துறை உதவி அலுவலா் எம். துரை, அங்கு அமைக்கப்பட்டிருந்த தீரா்கள் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினாா். தீயணைப்பு நிலைய அலுவலா் அன்பழகன், நிலைய போக்குவரத்து அலுவலா் சிவஞானம் மற்றும் தீயணைப்பு வீரா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, கீழ்வேளூரில் சிறப்பு தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜராஜசோழன், தீரா்கள் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து, வீரவணக்கம் செலுத்தினாா். தீயணைப்பு வீரா்கள் மௌன அஞ்சலி செலுத்தினா். கீழ்வேளூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தீத்தடுப்பு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

வேதாரண்யம்: வேதாரண்யம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பணியின்போது உயிா்நீத்த அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு மலா் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, வேதாரண்யம் பேருந்து நிலையத்திலிருந்து தீ தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. நிலைய அலுவலா் செ. கந்தசாமி தலைமையில் வீரா்கள் தீயணைப்பு வாகனத்துடன் வீதிகளில் சென்று பிரசாரம் மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.