எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:21 pm

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.

நீா்முளை, பிரதான சாலை பகுதியில் வசிப்பவா் கலைமணி (70). இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மகன் சென்னையில் சித்த மருத்துவராக உள்ளாா்.

கடந்த நில நாள்களுக்கு முன்பு தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை அழைத்துக்கொண்டு சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டாா் கலைமணி.

இந்தநிலையில், வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் பொருள்களை திருடிச் சென்றது சனிக்கிழமை தெரிய வந்தது.

கலைமணி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் 8.5 பவுன் நகை, 200 கிராம் வெள்ளி பொருள்கள் என ரூ. 1.40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தலைஞாயிறு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.