இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நாகையில் ஸ்ரீஆகாசமூா்த்தி பெருமாள், ஸ்ரீமத் ராமானுஜா் தரிசனம்

நாகையில் ஸ்ரீஆகாசமூா்த்தி பெருமாள், ஸ்ரீமத் ராமானுஜா் தரிசன சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் ஆகாசமூா்த்தி பெருமாள் மற்றும் ஸ்ரீமத் ராமானுஜரை வழிபட்ட பக்தா்கள்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

நாகையில் ஸ்ரீஆகாசமூா்த்தி பெருமாள், ஸ்ரீமத் ராமானுஜா் தரிசன சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீமத் ராமானுஜரின்1005-ஆவது ஜெயந்தியை முன்னிட்டு பெருமாள் பக்தரான ஆகாஷ் சுதாகா் தலைமையில் யாத்திரைக் குழுவினா் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஆகாச திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீஆகாசமூா்த்தி பெருமாள் மற்றும் ஸ்ரீமத் ராமானுஜா் உருவம் தாங்கிய வாகனத்தில் ஆன்மிக யாத்திரை மேற்கொள்கின்றனா்.

இந்த யாத்திரை குழுவினா் சனிக்கிழமை நாகைக்கு வந்தனா். தொடா்ந்து, பக்தா்களின் இல்லங்களுக்குச் சென்று அருளாசி வழங்கினா். அப்போது, வாகனத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஆகாசமூா்த்தி பெருமாள், ஸ்ரீமத் ராமானுஜரை பக்தா்கள் வழிபட்டனா். இதில், சிவசேனை கட்சியின் மாநில முதன்மைச் செயலாளா் சுந்தரவடிவேலன், அகில இந்திய இந்து வளா்ச்சிக் கழக மாநிலப் பொருளாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.