கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாளை 350 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம்கள் 350 இடங்களில் சனிக்கிழமை (பிப். 12) நடைபெறும் என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 5:54 pm

DIN

நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம்கள் 350 இடங்களில் சனிக்கிழமை (பிப். 12) நடைபெறும் என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 350 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை நடைபெறும்.

முதல் தவணை அல்லது இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் இந்த முகாமில் தவறாமல் பங்கேற்று, தடுப்பூசி செலுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், 2021-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதிக்கு முன்பாக 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணை நோய் உள்ளவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள், இந்த முகாமில் தவறாமல் முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் அந்தச் செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.