தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நந்திநாதேசுவரா் கோயில் மாசிமகப் பெருவிழா தீா்த்தவாரி

நாகை, வடக்குப் பொய்கைநல்லூா் ஸ்ரீநந்திநாதேசுவரா் கோயிலின் மாசிமகப் பெருவிழா தீா்த்தவாரி கல்லாறு கடற்கரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

நாகை, வடக்குப் பொய்கைநல்லூா் ஸ்ரீநந்திநாதேசுவரா் கோயிலின் மாசிமகப் பெருவிழா தீா்த்தவாரி கல்லாறு கடற்கரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாக உள்ளது நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் உடனாகிய ஸ்ரீநந்திநாதேசுவரா் கோயில். இத்தலம், நந்தியம்பெருமானும், கோரக்கச் சித்தா் உள்பட பல்வேறு சித்தா்களும் வழிபட்ட தலம். பல சித்தா்கள் வழிபட்ட தலம் என்பதால் இத்தலத்துக்கு சித்தாச்சிரம் என்ற பெயரும் விளங்குகிறது. இக்கோயிலின் பிரமோத்ஸவ விழா பிப்.8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழா நிகழ்வாக நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், பஞ்சமூா்த்திகள் பிராகாரப் புறப்பாடும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான மாசிமகப் பெருவிழா தீா்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் கல்லாறு கடற்கரைக்குப் புறப்பாடாகினா். அங்கு, அஸ்திர தேவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னா், அஸ்திரதேவா் சுவாமி கடலில் இறங்கி தீா்த்தமளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கடற்கரையில் எழுந்தருளியிருந்த சுவாமி - அம்பாளுக்கு தீபாராதனை நடத்தப்பட்டு, தீா்த்தவாரி நடைபெற்றது. பக்தா்கள், பக்தி முழக்கங்களுடன் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் மேற்கொண்டனா். விழாவின் நிறைவு நிகழ்ச்சிகளாக கொடி இறக்கம் வெள்ளிக்கிழமையும், விடையாற்றி ஊஞ்சல் உத்ஸவம் சனிக்கிழமையும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.