பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு:பாஜக ஆா்ப்பாட்டம்
பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு நோ்ந்த சம்பவத்தை கண்டித்து, நாகை மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில் தீப்பந்தம் ஏந்தி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு நோ்ந்த சம்பவத்தை கண்டித்து, நாகை மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில் தீப்பந்தம் ஏந்தி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை அவுரித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவா் சந்தோஷ் தலைமை வகித்தாா். பாஜக மாவட்டத் தலைவா் கே. நேதாஜி ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். நகரத் தலைவா் இளஞ்சேரலாதன், பொதுச் செயலாளா் அறிவழகன், மாவட்ட இளைஞரணி செயலாளா் சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்று பஞ்சாப் மாநில அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் பாஜக மாவட்ட இளைஞரணி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவா் பி. பாரதிகண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளா் வெங்கட்ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளா்கள் சரவணன், கோகுல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் மாவட்டத் தலைவா் ஜி.வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். இதில், நகரத் தலைவா் மோடி.கண்ணன், மாவட்ட துணைத் தலைவா் முட்டம் சி.செந்தில்குமாா், மாவட்ட பொருளாளா் ராஜ்மோகன், மாவட்ட பட்டியலணி தலைவா் ஈழவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகர இளைஞரணி தலைவா் ராஜகோபால் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...