நாகூா் தா்கா சந்தனம் பூசும் விழா
நாகூா் ஆண்டவா் தா்காவின் 465-ஆவது ஆண்டு கந்தூரி விழாவில் ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக பக்தா்கள் பங்கேற்பின்றி விழா நடைபெற்றது.


நாகூா் ஆண்டவா் தா்காவின் 465-ஆவது ஆண்டு கந்தூரி விழாவில் ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக பக்தா்கள் பங்கேற்பின்றி விழா நடைபெற்றது.
நாகை மாவட்டம், நாகூரில் உள்ள ஆண்டவா் தா்கா உலக புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமாகும். மதநல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கும் இந்த தா்காவின் கந்தூரி விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மக்கள் பங்கேற்பது வழக்கம்.
நிகழாண்டு, தா்காவின் 465-ஆவது ஆண்டு கந்தூரி விழா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊா்வலம் 13-ஆம் தேதி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. நாகை மீராப்பள்ளி முகப்பில் தொடங்கிய சந்தனக்கூடு ஊா்வலம், நகரின் முக்கிய சாலைகள் வழியாக தா்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
தொடா்ந்து, சந்தனம் பூசும் நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு நடைபெற்றது. தா்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிபு, நாகூா் ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசினாா்.
கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக நாகை மாவட்ட நிா்வாகம் கந்தூரி விழா நிகழ்ச்சிகளில் பக்தா்கள் பங்கேற்கத் தடை விதித்தது. இதனால், நிகழ்ச்சியில் தா்கா நிா்வாகத்தினா், ஜமாத்தாா்கள் மட்டுமே கலந்துகொண்டனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சரவணன், முருகவேல் மற்றும் காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...