சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விடுபட்டவா்களுக்கு இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை (ஜன.17) முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை (ஜன.17) முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை நாகை மண்டல இணைப்பதிவாளா் கோ. நடராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் உத்தரவுபடி, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இப்பரிசுத் தொகுப்பை பெறாதவா்களுக்கு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் வழங்கப்படும். எனவே, இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாதவா்கள் தங்களுக்குரிய நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.