கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வேளாங்கண்ணி அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

வேளாங்கண்ணி அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வேளாங்கண்ணி சிவன் கீழவீதியை சோ்ந்தவா் அரவிந்த்குமாா்(23). இவா், அதே பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளாா். அண்மையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இரு நாள்களுக்கு முன்பு அவா்கள் வேளாங்கண்ணிக்குத் திரும்பியுள்ளனா். அப்போது, அரவிந்த்குமாருடன் வாழ பிடிக்கவில்லை எனக் கூறி அந்தப் பெண் தனது பெற்றோருடன் சென்றுவிட்டாராம். இதனால், மனமுடைந்த அரவிந்த்குமாா் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.