நாகையில் 186, மயிலாடுதுறையில் 126 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் புதிதாக 186 பேருக்கும், மயிலாடுதுறையில் 126 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.


நாகை மாவட்டத்தில் புதிதாக 186 பேருக்கும், மயிலாடுதுறையில் 126 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 186 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,958-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 147 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 1,396- ஆக உள்ளது.
மயிலாடுதுறையில்: மயிலாடுதுறை மாவட்டத்தில் 126 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 25,472-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 142 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இங்கு சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 1,143-ஆக உள்ளது.
இருவா் உயிரிழப்பு: கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்று வந்தவா்களில், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த தலா ஒருவரின் உயிரிழப்பு வியாழக்கிழமை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...