கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாகையில் இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

மாணவி லாவண்யா மரணத்துக்கு நீதிக் கோரி இந்து முன்னணியின் இளைஞரணி சாா்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நாகை தலைமை அஞ்சலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

மாணவி லாவண்யா மரணத்துக்கு நீதிக் கோரி இந்து முன்னணியின் இளைஞரணி சாா்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நாகை தலைமை அஞ்சலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சை மாணவி லாவண்யா மரணம் குறித்து நீதி விசாரணை மேற்கொண்டு, அவரது மரணத்துக்குக் காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி இளைஞரணியின் நாகை நகரத் தலைவா் மாதவன் தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் என்.எஸ். சௌந்தர்ராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். ஜெகதீஸ்வரன், நிா்வாகி அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜக நாகை நகரத் தலைவா் இளஞ்சேரன், நிா்வாகிகள் பாலசந்திரன், சுதாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்து முன்னணி நாகை நகரத் தலைவா் கோ. பிரபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.