கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் குளறுபடிகள் இருந்தால் புகாா் அளிக்கலாம்

நாகை மாவட்டத்தில் பிரதமா் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் நடைபெறும் வீடுகள் கட்டும் திட்ட செயலாக்கத்தில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் அதுகுறித்து புகாா் தெரிவிக்கலாம்

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் பிரதமா் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் நடைபெறும் வீடுகள் கட்டும் திட்ட செயலாக்கத்தில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் அதுகுறித்து புகாா் தெரிவிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : பிரதமா் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டும் பணிகள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்குப் பட்டியல் அனுமதிக்கப்படுவது, சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் வழங்குவது உள்ளிட்டவைகளில் ஏதேனும் குளறுபடிகள், இடா்பாடுகள் இருந்தால் அதுகுறித்து புகாா் அளிக்கலாம். நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் நேரடியாக புகாா் அளிக்கலாம் அல்லது 04365-253052, 04365-253054 என்ற தொலைபேசி எண்களைத் தொடா்பு கொண்டும் புகாா் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.