தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க தனி அலுவலா்கள் நியமனம்

நாகை மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க தனி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :28 ஜனவரி 2022, 5:11 pm

DIN

நாகை மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க தனி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான தோ்தல் அறிக்கையை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமானஅ. அருண் தம்புராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். பின்னா் அவா் தெரிவித்ததாவது:

மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் 2 நகராட்சிகள், வேளாங்கண்ணி, கீழ்வேளூா், தலைஞாயிறு, திட்டச்சேரி ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள 117 வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்காக நகராட்சிப் பகுதிகளில் 128 வாக்குச் சாவடிகள், பேரூராட்சிப் பகுதிகளில் 60 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 188 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடைமுறைகளை கடைப்பிடித்து காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். சனிக்கிழமையும் மனு தாக்கல் செய்யலாம்.

தோ்தல் நடத்தை விதிகள் ஜனவரி 26 முதல் அமலில் உள்ளன. 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. புகாா்கள், விவரங்கல் பெற மாவட்ட ஆட்சியா் அலுவலக தொலைப்பேசி 04365-253049 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

24 மணிநேரமும் செயல்படும் வகையில் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு தனி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளாா் என அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.