தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கீழையூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கீழையூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

கீழையூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தண்ணிலப்பாடி, சோழவித்தியாபுரம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடம், பாலக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட ஒட்டத்தடை பகுதியிலுள்ள அமுதகுளம் ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து திருக்குவளை ஊராட்சி பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெற்றுவரும் பாலம் கட்டுமான பணியை ஆய்வு செய்தாா். அடுத்து, சமத்துவபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் உறிஞ்சி குழி மற்றும் அப்பகுதியில் நடைபெறவுள்ள தொகுப்பு வீடு சீரமைப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

அவருடன், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் பசுபதி, உதவி செயற்பொறியாளா் பேபி, கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ். ராஜகுமாா் (வட்டார ஊராட்சி) எஸ். வெற்றிச்செல்வன் (கி.ஊ), திருக்குவளை ஊராட்சித் தலைவா் இல. பழனியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.