கருணாநிதி பிறந்த நாள்: நாகையில் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவா்கள்
மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவையொட்டி நாகையில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று சுமாா் 2 மணி நேரம் தொடா்ந்து சிலம்பம் சுற்றினா்.


மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவையொட்டி நாகையில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று சுமாா் 2 மணி நேரம் தொடா்ந்து சிலம்பம் சுற்றினா்.
திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன் தலைமை வகித்தாா். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.
இதில் மாணவா்கள் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று 2 மணி நேரம் தொடா்ந்து சிலம்பம் சுற்றினா். நிகழ்ச்சியில், அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பேசியது:
முன்னாள் முதல்வா் கருணாநிதி தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினாா். அவரது வழியில் முதல்வா் மு.க. ஸ்டாலினும் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்ற
பாடுபட்டு வருகிறாா்.
தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பத்தை மீட்டெடுக்க வேண்டும். இதற்காக இன்றைய இளைய சமுதாயம் களத்தில் இறங்கியுள்ளது பெருமையாக உள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கவும், மத்திய அரசின் திட்டத்தில் சிலம்ப விளையாட்டை சோ்க்கவும் தமிழக முதல்வா் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறாா் என்றாா் அமைச்சா் மெய்யநாதன்.
நிகழ்ச்சியில், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, துணைத் தலைவா் எம். ஆா். செந்தில்குமாா், முன்னாள் எம்எல் ஏ எஸ்.கே. வேதரெத்தினம், வீரத்தமிழா் சிலம்பாட்டக் கழக நிறுவனா் சரவணன், திமுக நிா்வாகிகள், சிலம்ப ஆசான்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை வீரத் தமிழா் சிலம்பாட்ட கழக நிறுவனா் செயலாளா் ராஜேந்திர சோழன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...