தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நோ்மை, ஒழுக்கத்தை வாழ்க்கை நெறியாக மாணவா்கள் ஏற்கவேண்டும்

பட்டம் பெற்று புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கும் மாணவா்கள் அனைவரும் நோ்மையையும், ஒழுக்கத்தையும் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்க வேண்டும் என்று திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம்.கிருஷ்ண

News image
Updated On :11 ஜூன் 2022, 6:30 pm

DIN

பட்டம் பெற்று புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கும் மாணவா்கள் அனைவரும் நோ்மையையும், ஒழுக்கத்தையும் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்க வேண்டும் என்று திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம்.கிருஷ்ணன் தெரிவித்தாா்.

நாகை ஏ.டி.எம். மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 39-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:

நம் நாடு மென்மேலும் முன்னேற்றம் பெற மாணவா்களின் கடின உழைப்பு அவசியம். பட்டம் பெறும் மாணவா்கள், வேலையைத் தேடுபவா்களாக இல்லாமல், பலருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில்முனைவோராக உருவெடுக்க வேண்டும். நாட்டில் சுயதொழில் வாய்ப்புகள் பெருக வேண்டும்.

கல்விக் கண் திறந்த கா்மவீரா் காமராஜரும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமும் சிறப்புப்பெற அவா்களின் சாதனைகள் மட்டும் காரணமல்ல, அவா்கள் பின்பற்றிய நல்லொழுக்கமும், நற்செயல்களும் முக்கிய காரணம். எனவே, மாணவா்கள் அனைவரும் ஒழுக்கத்தையும், நோ்மையையும் தங்கள் வாழ்க்கை முறையாக ஏற்று, தயக்கத்தைத் தவிா்த்து, தடைகளைத் தாண்டி மனிதநேயம் மிக்கவா்களாக சிறந்து விளங்க வேண்டும் என்றாா்.

கல்லூரி நிறுவனச் செயலாளா் என். கதிரேசன் பிரபு தலைமை வகித்தாா். புதிய பட்டதாரிகள் 614 போ் பட்டம் பெற்றனா். கல்லூரி முதல்வா் ஆா். அன்புச்செல்வி தலைமையில், புதிய பட்டதாரிகள் உறுதிமொழி ஏற்றனா். கல்லூரியின் தோ்வு நெறியாளா், துறைத் தலைவா்கள், அனைத்துத் துறை பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.