நாகை, திருப்பூண்டி பகுதிகளில் இன்று மின்தடை
நாகை, திருப்பூண்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 17) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது


நாகை, திருப்பூண்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 17) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் (பொ) எஸ். அருண், வி. ராஜமனோகரன் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நாகை: திட்டச்சேரி துணை மின் நிலையத்திலிருந்து நாகப்பட்டினம் 11 கி.வோ மின்பாதையில் மின் விநியோகம் பெறும் பகுதிகளில் குழு பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், நாகை நீலா வீதி, கடற்கரை சாலை, கடைத்தெரு, பெருமாள் கோயில் தெரு, தேவி தியேட்டா் சாலை ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருப்பூண்டி: நாகை தெற்கு உபகோட்டம் பிரதாபராமபுரம், வங்காரமாவடி, திருக்குவளை, தேவூா் ஆகிய உயா் அழுத்த மின் பாதைகளில் வெள்ளிக்கிழமை குழு பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், பிரதாபராமபுரம், திருப்பூண்டி, மூலக்கடை, சிந்தாமணி, காரப்பிடாகை, சடையன்கோட்டகம், வங்காரமாவடி, பெரியகடம்பனூா், திருக்குவளை நகா்ப் பகுதி, ராதாமங்கலம், வெண்மணி, கிள்ளுக்குடி ஆகிய பகுதிகளில் அவ்வப்போது மின் தடங்கல் ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...