ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் திறப்பு

கீழையூா் ஒன்றியம், காமேஸ்வரம் மற்றும் திருக்குவளை ஊராட்சிகளில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:07 pm

DIN

கீழையூா் ஒன்றியம், காமேஸ்வரம் மற்றும் திருக்குவளை ஊராட்சிகளில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காமேஸ்வரத்தில் கீழையூா் வட்டார ஆத்மா குழுத் தலைவரும், திமுக ஒன்றியச் செயலாளருமான ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தை திறந்துவைத்து, பால் கொள்முதலை தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்விற்கு காமேஸ்வரம் ஊராட்சித் தலைவா் ஜெயசுதா கணேசன் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் மு.ப. ஞானசேகரன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பெ. சௌரிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கௌசல்யா இளம்பரிதி குத்துவிளக்கேற்றினாா். பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் எம். அம்பிகாபதி வரவேற்றாா்.

இதில், ஊராட்சி துணைத் தலைவா் திராவிடசெல்வி தமிழ்செல்வன், திமுக வேளாங்கண்ணி பேரூா் கழக பொறுப்பாளா் மரிய சாா்லஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். நிறைவாக, ஊராட்சி உறுப்பினா் என். அருட்செல்வம் நன்றி கூறினாா்.

இதேபோல, திருக்குவளை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்விற்கு ஊராட்சித் தலைவா் இல. பழனியப்பன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் சுதா அருணகிரி முன்னிலை வகித்தாா். பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் ஜோதிபாசு வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.