ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

‘வருமுன் காப்போம்’ சிறப்பு மருத்துவ முகாம்

கீழையூா் அருகே உள்ள திருப்பூண்டியில் தமிழக அரசு சாா்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:07 pm

DIN

கீழையூா் அருகே உள்ள திருப்பூண்டியில் தமிழக அரசு சாா்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தொடங்கிவைத்து, ‘மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்கள் அா்ப்பணிப்பு உணா்வோடு பணியாற்றி வருகின்றனா்’ என பாராட்டுத் தெரிவித்தாா்.

இம்முகாமில், கீழையூா் ஆத்மா குழுத் தலைவா் ஏ. தாமஸ் ஆல்வாஎடிசன், கீழையூா் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் மு.ப. ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கீழையூா் வட்டார மருத்துவ அலுவலா் டி. அரவிந்த் குமாா் சிறப்புரையாற்றினாா். கீழையூா் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் எம். சுப்பிரமணியன் வரவேற்றாா்.

இதில், ஒன்றியக்குழு துணைத் தலைவா் பெ. சௌரிராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கௌசல்யா இளம்பரிதி, திருப்பூண்டி ஊராட்சித் தலைவா் ராதிகா சத்யராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவாக சுகாதார ஆய்வாளா் கே. ராமமூா்த்தி நன்றி கூறினாா்.

இம்முகாமில் பொது மருத்துவம், ரத்த அழுத்தப் பரிசோதனை, சித்த மருத்துவம், கண் மருத்துவம், கா்ப்பிணிகளுக்கான பரிசோதனை, பல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.