ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

உக்ரைனில் ஒரேநாள் வகுப்போடு உடைந்த மருத்துவர் கனவு: வீடு திரும்பிய வேதாரண்யம் மாணவர்

உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்று போரின் காணமாக சிக்கித் தவித்த வேதாரண்யம் மாணவர் இன்று (மார்ச். 7) வீடு திரும்பினார். 

வீடு திரும்பிய அகத்தியன்.

Published On :

உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்று போரின் காணமாக சிக்கித் தவித்த வேதாரண்யம் மாணவர் இன்று (மார்ச். 7) வீடு திரும்பினார்.

மருத்துவர் கனவோடு உக்ரைன் சென்ற அவர், பன்னாட்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ஒரே ஒருநாள் மட்டும் வகுப்பில் பங்கேற்ற இந்த மாணவரின் மருத்துவர் கனவு உடைந்து போய் ஊர் திரும்பியுள்ளார்.  நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் நமச்சிவாயம் மகன் அகத்தியன்.

கடந்த பிப் .10 ஆம் தேதிதான் உக்ரைன் புறப்பட்டுச் சென்றார். போரின் காணமாக மார்ச்.2 ஆம் தேதி அவசரமாக  வெளியேற அறிவிக்கப்பட்டது. மாணர்கள் தங்கியிருந்த  விடுதியில் இருந்து காட்டின் வழியே நடந்தே சென்ற மாணவர், ரயில்வே நிலையத்தில் இருந்து புறப்படும் வரையில் உயிருக்கு உத்தரவாதம், நம்பிக்கை இல்லாத சூழல் நிலவியதாக கூறுகிறார். 

Story image

அங்கு நிலவும் மோசமான நிலை, உக்ரைனில் இனி எதுவும் தப்பிக்க வாய்ப்பு இருக்காது என எண்ணுவதாக கூறிய அவர், வீடு வந்து சேரும் வரையில் உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். பிப்.10-ல் புறப்பட்டு, மார்ச். 7-ல் சுவற்றில் மோதிய பந்து போல திரும்பிய நிகழ்வு மாணவரின் மருத்துவர் கனவை கேள்விக் குறியாக்கியுள்ளது.

Story image

தகவல் அறிந்த ரோட்டரி சங்கத்தினர் உள்ளிட்டோர் மாணவருக்கு துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.