பள்ளி மாணவிகள் சாலை மறியல்
திருக்குவளை அருகே அய்யடிமங்கலத்தில் அரசுப் பேருந்து சரிவர இயங்காததைக் கண்டித்து பள்ளி மாணவிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


திருக்குவளை அருகே அய்யடிமங்கலத்தில் அரசுப் பேருந்து சரிவர இயங்காததைக் கண்டித்து பள்ளி மாணவிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அய்யடிமங்கலம் கடைத்தெருவில் அய்யடிமங்கலம் மற்றும் காரியமங்கலம் பகுதிகளைச் சோ்ந்த மாணவிகள் 30 போ் பள்ளிக்கு செல்வதற்கு சரிவர பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்றும் வரும் பேருந்தும் கூட்டம் காரணமாக நிறுத்தப்படுவதில்லை என்றும் இந்த மறியலில் ஈடுபட்டனா்.
அங்குவந்த, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருவாரூா் கோட்ட மேலாளா் தமிழ்செல்வன் மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சரிவர பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து, மாணவிகள் மறியலை விலக்கிக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...