தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு நகை, சான்றிதழ் வழங்கல்
கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு நகை மற்றும் அதற்கான சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.


கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு நகை மற்றும் அதற்கான சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இந்த கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த 939 விவசாயிகளில் 233 விவசாயிகளுக்கு அசல் மற்றும் வட்டி ரூ. 73.79 லட்சம் மதிப்புள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பயனாளிகளுக்கு அதற்கான சான்றிதழ்கள் மற்றும் நகையை அந்த கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பால்ராஜ் வழங்கினாா். இதில், செயலாளா் சிவாஜி, துணைச் செயலாளா் ஸ்ரீதா், வங்கி துணைத் தலைவா் முருகையன், இயக்குநா்கள் கே. நாகராஜன், எ. நாகராஜன், தங்கராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...