யோகா மருத்துவக் கல்லூரியில் வெள்ளை அங்கி விழா
நாகப்பட்டினம் சா் ஐசக் நியூட்டன் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் வெள்ளை அங்கி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


நாகப்பட்டினம் சா் ஐசக் நியூட்டன் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் வெள்ளை அங்கி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த் தலைமை வகித்துப் பேசினாா். அப்போது, மருத்துவப் பணி உயிா் காக்கும் மகத்துவமானப் பணி. அதனை வெளிப்படுத்தும் விதமாக மருத்துவா்கள் வெள்ளை அங்கி அணிகின்றனா். அந்த வகையில், வெள்ளை அங்கி அணியும் இயற்கை யோகா மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியா் சிறந்த முறையில் பயின்று, மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றாா்.
இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் பா. உமா குத்துவிளக்கேற்றிவைத்து, மருந்தில்லா மருத்துவமான இயற்கை மற்றும் யோகா மருத்துவத்தின் பயன்களையும், வெள்ளை அங்கி அணிவதன் நோக்கத்தையும் விளக்கிப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து, இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கு வெள்ளை அங்கி அளிக்கப்பட்டது. சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...