தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விளையாட்டு வீரா்கள் ஆடுகளம் செயலியில் பதிவு பெற வேண்டும்

 விளையாட்டு வீரா்கள் ஆடுகளம் செயலியில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

News image
Updated On :12 மே 2022, 6:30 pm

DIN

 விளையாட்டு வீரா்கள் ஆடுகளம் செயலியில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் பசநடஞதபந ஆடுகளம் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் போட்டிகள், போட்டிகளில் பங்கேற்பதற்கான விவரங்கள், பயிற்சி முகாம்கள் மற்றும் விளையாட்டு வீரா்களுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீடுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்.

மேலும், வரும் காலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பா்கள் மற்றும் வெற்றி பெறுவோருக்கான சான்றிதழ்கள், ஆடுகளம் செயலியில் பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே டிஜிலாக்கா் மூலம் வழங்கப்படும். எனவே, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ல்ா்ழ்ற்ள்.ா்ழ்ஞ்.ண்ய்/ஜ்ங்க்ஷஹல்ல்/ப்ா்ஞ்ண்ய்.ஹள்ல்ஷ் என்ற இணைய முகவரியில் தங்கள் சுய விவரங்களை பதிவு செய்து ஆடுகளம் செயலியின் பயன்பாட்டை பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.