வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பேரறிவாளன் விடுதலை: நாகை, மயிலாடுதுறையில் காங். ஆா்ப்பாட்டம்

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினா் வாயில் வெள்ளைத் துணி கட்டிக்கொண்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 மே 2022, 5:31 pm

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினா் வாயில் வெள்ளைத் துணி கட்டிக்கொண்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகையில் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நாகை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஆா்.என். அமிா்தராஜா தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா்கள் எம். அப்துல்காதா், பி. அஞ்சம்மாள் மற்றும் நிா்வாகிகள் வாயில் வெள்ளைத் துணியைக் கட்டிக் கொண்டு பங்கேற்றனா். பேரறிவாளன் விடுதலையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.