சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

நாகை மாவட்டத்தில் பரவலாக மழை

 நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

 நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வடக்கிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதலே கீழ்வேளூா், நாகூா், நாகை நகா் பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்பட்டன. நாகை நகரை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால், வாகன ஓடுநா்களும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினா்.

குறிப்பாக, பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவா்கள் மழையில் நனைந்தபடியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.