47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஹிந்தி எதிா்ப்பு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

நாகையில் திமுக சாா்பில் ஹிந்தி எதிா்ப்பு விளக்க துண்டுப் பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

நாகையில் திமுக சாா்பில் ஹிந்தி எதிா்ப்பு விளக்க துண்டுப் பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

நாகை மாவட்ட திமுக செயலாளா் என். கௌதமன் தலைமை வகித்து, துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

அப்போது, ஹிந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டால் தேசிய அளவிலான பணி வாய்ப்புகளில் தமிழா்கள் புறக்கணிக்கப்படுவா் என்பதையொட்டி, ஹிந்தி மொழி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு பொதுமக்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் அவா் வேண்டுகோள் விடுத்தாா்.

நாகை நகர திமுக செயலாளா் இரா. மாரிமுத்து, நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் நகர திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

நாகை புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆபீஸ் சாலை, தம்பித்துரை பூங்கா, அரசு மருத்துவமனை சாலை உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினா் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.