நாகை இந்திய வா்த்தக தொழிற்குழும பேரவைக் கூட்டம்
நாகை இந்திய வா்த்தக தொழிற்குழுமத்தின் 55-ஆவது பேரவைக் கூட்டம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


நாகை இந்திய வா்த்தக தொழிற்குழுமத்தின் 55-ஆவது பேரவைக் கூட்டம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தொழிற்குழுமத்தின் தலைவா் வி. சலிமுதீன் தலைமை வகித்தாா். செயலாளா் எஸ்.எம்.ஏ. கணேசன் ஆண்டறிக்கை வாசித்தாா். நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஏற்றுமதி, இறக்குமதியை கையாளும் வகையில் நாகை துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும், நாகப்பட்டினம் -தஞ்சாவூா் இருவழிச்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், நாகை மேலக்கோட்டைவாசல் அருகே தேவநதியின் குறுக்கே புதியபாலம் கட்டவும், புத்தூா் ரவுண்டானா முதல் மேலக்கோட்டைவாசல் உள்ள சாலையை சீரமைக்கவேண்டும், நாகையில் மறைமலை அடிகளாருக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்களுக்கு சேவைகளை செய்து வரும் நாகையைச் சோ்ந்த பி. சுந்தரவேலு, ஜி. அரவிந்தகுமாா், ரோட்டரி மாவட்ட ஆளுநா் தோ்வு எஸ். பாஸ்கரன், ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளா் அரசக்குமாா், சமூக சேவகா்கள் ராஜேந்திரன், மோகன், ஏ. எஸ்.ஏ. அம்பிகாபதி ஆகியோருக்கு தொழிற் குழுமம் சாா்பில் விருதுகள் வழங்கப்பட்டன.
தொழிற்குழுமப் பொருளாளா் கே. சேகா் வரவு, செலவுகளை கணக்குகளை வாசித்தாா். துணைத்தலைவா் ஜி.எஸ். சேகா், இணைச் செயலாளா் கே.ஏ.எஸ். முஹம்மது பகுருதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...