வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது  கடல் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 3 மீனவர்கள் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
தாக்கப்பட்ட மீனவர்கள்.
Updated On :24 ஜனவரி 2022, 3:23 am

DIN

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது  கடல் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 3 மீனவர்கள் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் (45), நாகமுத்து (46), ராஜேந்திரன் ( 55) ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மூவரும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 8 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது இரவு 11 மணியளவில் அங்கு வந்த  இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத  மூன்று நபர்கள், படகில் இருந்த  மீனவர்களை கம்பால் தாக்கியுள்ளனர்.

கடலில் விரிக்கப்பட்டிருந்த சுமார் கிலோ 300  வலை, செல்போன் -1 , பேட்டரி 1, எக்கோ சிலிண்டர் 1, வாக்கி டாக்கி 1, ஜிபிஎஸ் 1, டீசல் 10 லிட்டர் ஆகிய பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இன்று காலை ஆறு காட்டுத்துறை, கடற்கறைக்கு திரும்பிய மூவரும் வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.