வேதாரண்யத்தில் நூறுநாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: எம்.பி, எம்.செல்வராசு பங்கேற்பு
By DIN | Published On : 11th March 2022 02:03 PM | Last Updated : 11th March 2022 02:03 PM | அ+அ அ- |

ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்.பி.செல்வராசு.
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி நேரத்தை டிஜிட்டல் படம் எடுக்க ஏதுவாக காலை 8 மணிக்கு மாற்றி அமைத்துள்ளதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று பகல் (மார்ச் 11) நடைபெற்றது.

நாகை தொகுதி மக்களவை உறுப்பினர் எம். செல்வராசு பங்கேற்று பேசினார்.
கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவகுரு. பாண்டியன் தலைமை வகித்தார். ராஜாஜி பூங்காவில் இருந்து பேரணியாக சென்ற நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்திட்டத்தின் மேளாண்மையை மத்திய அரசு நேரடியாக் கொண்டுவர முயற்சிக்கும் நிலையில், கட்டமைப்பு, நிர்வாக குறைபாடுகள் காரணமாக திட்ட பயனாளிகள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.