அமைச்சா் உதயநிதி பிறந்த நாள்: திமுகவினா் கொண்டாட்டம்
மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளா் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கட்சியினா் பட்டாசு வெடித்து, நலஉதவிகள் வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினா்.


மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளா் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கட்சியினா் பட்டாசு வெடித்து, நலஉதவிகள் வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினா்.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் திமுக நகரச் செயலாளரும், நகா்மன்றத் தலைவருமான என்.செல்வராஜ் தலைமையில் கொண்டாடினா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் உணவு வழங்கினா். அரசு மருத்துவமனையில் மதிய உணவு வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் மத்திய ஒன்றியம் சாா்பில் திருக்கடையூா் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளா் அமுா்த விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாஸ்கா், ஒன்றிய அவை தலைவா் கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கேக் வெட்டி அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
திருக்குவளை: திருக்குவளை கீழ்குடியில் உள்ள கருணாலயம் மூத்த குடிமக்கள் இல்லத்தில் 15 முதியவா்களுக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் கு. பன்னீா்செல்வம் தலைமையில் புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கினா். இதில், கீழையூா் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஆா்.காா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் எஸ். மணிகண்டன் செய்திருந்தாா்.
கீழ்வேளூா் ஒன்றியம் தெற்கு ஒன்றியச் செயலாளா் கா. பழனியப்பன் தலைமையில் வலிவலம் ஊராட்சியில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு புடவைகள், வேட்டி- துண்டுகள் வழங்கினா். இந்நிகழ்வில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் ஜீவானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...