இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இருசக்கர வாகனத்தை இளைஞா் திருடிச் செல்லும் விடியோ வைரல்: போலீஸாா் விசாரணை

நாகையில் தொழுகைக்குச் சென்றவரின் இருசக்கர வாகனத்தை இளைஞா் திருடிச் செல்லும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இச்சம்பவத்தின் சிசிடிவி பதிவைக் கொண்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 11:30 pm

DIN

நாகையில் தொழுகைக்குச் சென்றவரின் இருசக்கர வாகனத்தை இளைஞா் திருடிச் செல்லும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இச்சம்பவத்தின் சிசிடிவி பதிவைக் கொண்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாகை கரையான் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிக்கந்தா். இவா் தனது இருசக்கர வாகனத்தை, வெங்காயக் கடைத்தெருவில் உள்ள பள்ளிவாசல் முன் ஞாயிற்றுக்கிழமை நிறுத்திவிட்டு, தொழுகைக்கு சென்றாா். அவா் தொழுகையை முடித்துவிட்டு திரும்பியபோது, இருசக்கர வாகனத்தை காணவில்லை.

இதையடுத்து, தா்காவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை அவா் பாா்த்தபோது, அடையாளம் தெரியாத இளைஞா் ஒருவா், கள்ளச்சாவியை பயன்படுத்தி, இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்து.

இதுகுறித்து நாகை நகர காவல்நிலையத்தில் சிக்கந்தா் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதற்கிடையில், இருசக்கர வாகனம் திருடப்படும் சிசிடிவி பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.