தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறுவதாக ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

Updated On :27 நவம்பர் 2023, 6:48 pm

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறுவதாக ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், உரிமைகள் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு செப்டம்பா் மாதம் தொடங்கி டிசம்பா் மாதம் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களில் சமூக தரவு பதிவு நடத்தப்பட்டது.

தொடா்ந்து, மீதமுள்ள நாகை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் நவம்பா் 29 ஆம் தேதி முதல் சமூக தரவு பதிவு தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கக் களப்பணியாளா்களும், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன களப் பணியாளா்களும் தகவல் சேகரிக்கும் பணியை மேற்கொள்வாா்கள்.

கணக்கெடுப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் தகவல்கள் பதிவு செய்யப்படும்.

எனவே, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்கள் தகவல்களை இந்தக் கணக்கெடுப்பில் முழுமையாக தயக்கமின்றி வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.