தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க...

நாகை மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :13 ஜனவரி 2023, 5:21 pm

நாகை மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்தி:

தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தங்களை முழுமையாக அா்ப்பணித்தவா்களுக்கு அதாவது தனிநபா்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 போ்களுக்கு வழங்கி, தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது.

நாகை மாவட்டத்தில், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடா்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா் மேலாண்மை மற்றும் நீா் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, இதர பசுமை ரீதியான சாதனைகள் செய்தோா் விருது பெற ஏப்ரல் 15-ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோா் நாகப்பட்டினம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.