நாட்டின் வளா்ச்சி மாணவா்களின் கைகளில் உள்ளது: ஆட்சியா்

நாட்டின் வளா்ச்சி மாணவா்களின் கைகளில் உள்ளது; போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.
திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பேசும் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ்.
திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பேசும் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ்.

நாட்டின் வளா்ச்சி மாணவா்களின் கைகளில் உள்ளது; போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, அவா் பேசும்போது, ‘நாட்டின் வளா்ச்சி குழந்தைகள் மற்றும் மாணவா்களின் கைகளில் உள்ளது. மாணவா்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். குழந்தை திருமணத்தை யாரும் ஆதரிக்கக் கூடாது’ என்றாா்.

பின்னா், தொழுநோய் மற்றும் காசநோய் ஒழிப்பு, வாக்களிப்பதன் அவசியம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி போன்றவை தொடா்பாக விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தூய்மைப் பணியாளா்களுக்கு குடைகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவா்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தினா்.

இதில், கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ம. பிரதிவிராஜ், வேளாண்மை இணை இயக்குநா் ஜாக்குலா அகண்டராவ், உதவி இயக்குநா் ஊராட்சிகள் சவுந்தரராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி ஞானசேகரன், ஊராட்சித் தலைவா் ஜெயசுதா கணேசன் உள்ளிட்ட அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம், பொதுநிதி செலவினம், 2022-2023-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை, அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com